பாரதி கலை மன்றம் என்பது ஹூஸ்டனில் நிறுவப்பட்ட இலாப நோக்கற்ற அமைப்பாகும். கிட்டதட்ட 45 ஆண்டுகளுக்கு முன்பு திரு. சாம் கண்ணப்பன் அவர்களால் துவங்கப்பட்ட இந்த அமைப்பு. இந்தியாவின் தமிழ் பேசும் மக்களை ஒருங்கிணைத்து கலை,இலக்கியம், கலாச்சாரம் மற்றும் சமூக தொடர்புகளை ஏற்படுத்தும் ஒரு பாலமாக இன்றும் தலைசிறந்து விளங்குகிறது. இந்த அமைப்பு, அனைவரிடமும் இந்தியாவின் கலாச்சாரம், நிறம், மதம், இனம், மதம், பாலினம் அல்லது தேசிய வம்சம் ஆகியவற்றிக்கு அப்பாற்பட்டு நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் உருவாக்கி வருகிறது.