தமிழே அழகு.. தமிழே நிறைவு...

image2

 டெக்சாஸ் மாநிலம் ஹூஸ்டன் நகரில் உள்ள  ஹூஸ்டன் பல்கலைக்கழகம் தமிழ் மொழி படிக்க தனி இருக்கை அமைத்து தர ஒப்புதல் வழங்கியுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு  தொடர்பு கொள்ளவும். info@houstontamilchair.org

image3

வரலாறு

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும்.திராவிட மொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது

image4

கம்பர்

 கம்பர் என்பவர் தமிழ் கவிஞரும், நூலாசிரியரும் ஆவார். இவர் இயற்றிய கம்பராமாயணம் நூலானது புகழ் பெற்றதாகும். கம்பராமாயணத்தினை படித்த பலரும் கம்பரின் கவித்திறனைப் பாராட்டியுள்ளார்கள். கம்பருக்கு "கல்வியிற் பெரியோன் கம்பன்", "கவிச்சக்ரவர்த்தி" போன்ற பட்டங்களை சூட்டியுள்ளனர். கம்பரின் கவித்திறனால், "கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவி பாடும்" என்ற முதுமொழி தமிழில் உள்ளது. தமிழ் இலக்கியத்தில் கம்ப இராமாயணமே மிகப்பெரிய இதிகாசம் என கருதப்படுகிறது. 

பேரூர் ஆதினம் திரு. மருதாசல அடிகளார்

 ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை பொருளாளர் டாக்டர் நா கணேசன் பேரூர் ஆதினத்தைச் சேர்ந்த திரு. மருதசல அடிகளார் அவர்களை அறிமுகப்படுத்தினார், தலைவர் திரு. சாம் கன்னப்பன், நிதி திரட்டும் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ்.ஜி. அப்பன், துணைத் தலைவர் திரு துபில் நரசிம்மன், மானிய துணைத் தலைவர் டாக்டர் திருவேங்கிடம், செயலாளர் பெருமாள் அண்ணாமலை, மீனாட்சி கோவில் (எம்.டி.எஸ்) தலைவர் டாக்டர் பத்மினி நாதன் மற்றும்   பாரதி கலை மன்றம் (பி.கே.எம்) தலைவர் பிரியா சந்துரு ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்க