https://talktosonicz.com https://talktosonicz.com https://talktosonicz.com https://talktosonicz.com https://talktosonicz.com https://talktosonicz.com https://talktosonicz.com https://talktosonicz.com https://talktosonicz.com https://talktosonicz.com https://talktosonicz.com

ஹூஸ்டன் தமிழ் இருக்கை – ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை

தமிழ்தமிழ் | EnglishEnglish

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

தமிழுக்கென ஒரு இருக்கை

தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மற்றும் பழமையான மொழிகளில் ஒன்றாகும். இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான இந்த மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளிலும் ஒன்றாகும். மற்ற செம்மொழிகளை விடத் தமிழுக்கு ஒரு சிறப்புப் பெருமை உண்டு. வேறு எந்தச் செம்மொழியிலும் பழங்கால இலக்கிய நடை மற்றும் அமைப்புத் தற்போது வழக்கத்தில் இல்லை ஆனால் தமிழில் மட்டும் தான் 2000 ஆயிரம் வருடம் பழமையான திருக்குறளும், ஆத்திச்சூடியும் இன்றும் தமிழ் சமூகத்தின் அடித்தளமாக இருக்கிறது. தலைமுறைகளைத் தாண்டி தமிழ் இலக்கியங்கள் நிலைத்து நிற்க உலகெங்கும் விரவிக் கிடக்கும் தமிழ்ச் சமூகத்தின் பங்கு அளப்பரியது.

தமிழ் மொழியின் தொடர்ச்சியாக வரும் தமிழர் பண்பாடும் உலகில் தமிழர்கள் வசிக்கும் இடங்களுக்கெல்லாம் பரவியிருக்கிறது.

தமிழ் கலாச்சாரம் மொழி, இலக்கியம், இசை, நடனம், நாட்டுப்புறக் கலை, தற்காப்புக் கலை, ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, விளையாட்டு, ஊடகங்கள், நகைச்சுவை, உணவு, ஆடைகள், கொண்டாட்டங்கள், தத்துவம், மதங்கள், மரபுகள், சடங்குகள், நிறுவனங்கள், அறிவியல், தொழில்நுட்பம் எனப் பலதரப்பட்ட துறைகளை உள்ளடக்கியது.

தமிழ் மொழியின் மற்றும் தாய் மண் பிணைப்பின் ஊடாக தமிழர் மரபு, வரலாறு மற்றும் விழுமியங்கள் பேணப்பட்டு அடுத்தத் தலைமுறைகளுக்கும் சென்றடைந்திருக்கின்றன.

எட்டுத்திக்கும் ஒலிக்கட்டும் தமிழ்

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தகுடியாய் தமிழினம். தமது தொன்மை மாறாது இன்றும் பல்வேறு நாடுகளில் ஆட்சி மொழியாய் அங்கீகாரம் பெற்று தனது விழுதை பரப்பி செம்மொழியாய் சிறப்படைந்து உலகெங்கிலும் பரவி நிற்கிறது தமிழ். புலம் பெயர்ந்த தமிழர்கள் கடந்த இரண்டு மூன்று தலைமறைகளாக வெவ்வேறு நாடுகளில் குடிபெயர்ந்து அந்தந்த நாடுகளில் குடியுரிமை பெற்று நிரந்தர வாழ்வை பெற்று நிமிர்ந்து நிற்கின்றனர். பொதுவாக அமெரிக்கா கனடா ஐரோப்பியநாடுகள் கிழக்காசியநாடுகள் என பல்வேறுநாடுகளில் வெவ்வேறு துறைகளில் பரவிக்கிடக்கின்றனர் ஆனால் அவர்கள் குடியேறிய நாடுகள் வேற்றுமொழியின் தேசமானதால் நமது தாய்மொழி கல்வியை அங்கு எடுத்துச்செல்வது, பெறுவது அவசிமானதாகிறது. ஆனால் பள்ளிப்படிப்பு என்பது அங்கு புலம் பெயர்ந்த தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்டு பல இடங்களில் வெற்றிகரமாக நடந்தேறிவருகிறது. ஆனால் பல்கலைக்கழகம் சார்ந்த ஆராய்ச்சிக்கான உயர் கல்வி படிப்புகளை படிக்க எந்த வசதியும் இல்லை.

குறிப்பாக இரண்டரை லட்சம் பேர் தமிழர்கள் வாழும் அமெரிக்காவில் பல்கலையில் பயிலுவதற்கான ஆராய்ச்சிக்கான எந்த விதமான படிப்பும் இல்லை. இதனைக் கருத்தின் கொண்டு சென்ற வருடம் ஹார்வேர்டில் பல்கழைக்கழகம் உலகத் தமிழர்கள் அனைவரின் உதவியுடன் தமிழ் இருக்கையானது நிறுவப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இப்போது டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் பல்கலையில் தமிழிருக்கை அமைக்க முன்னேடுப்பானது நடந்துவருகிறது.

நிகழ்வுகள்

சர்வதேச பேச்சுப் போட்டியின் இறுதிச்சுற்று

சர்வதேச பேச்சுப் போட்டியின் இறுதிச்சுற்று. பல்வேறு நாடுகளை சார்ந்த மாணவர்கள் கலந்துக் கொள்ளும் சுவாரசியமான திறமை போட்டி. அவசியம் நேரலையில் கலந்து கொண்டு பங்குபெறும் மாணவர்களை வாழ்த்துங்கள் மற்றும் உங்கள் குழந்தைகளுக்கும் ஊக்கமளியுங்கள். நாள்: சனிக்கிழமை, டிசம்பர் 19, 2020 நேரம்: காலை 7 மணி CST அமெரிக்கா / மாலை 6;30 மணி IST இந்தியா நேரலையில் காண: https://www.facebook.com/HoustonTamilStudiesChair.

Online Fund Raiser – Oct 10, 2020 10 am CST / 8:30 pm IST

Online Fund Raiser - Oct 10, 2020 10 am CST / 8:30 pm IST அக்டோபர் மாதம் 10ம் நாள் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கைக்கு நிதி சேர்க்கும் விதமாக "இணையத்தில் இசை விருந்து" என்ற நிகழ்ச்சியை சமூக வலைதளம் மூலமாக நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்ச்சிக்கு உலகமெங்கும் உள்ள தமிழ் சங்கங்கள் மற்றும் தமிழ்ப் பள்ளிகள் உதவி செய்ய முன்வந்துள்ளனர். இந்த திட்டத்திற்கு தங்கள் ஊடக உதவி புரிந்திட வேண்டுகோள் வைக்கிறோம். [...]

Press Release – Houston Tamil Studies Chair – Donor Signing Event – University of Houston

Donor Signing Celebration

தமிழர் கலை

இயல் இசை நாடகத்திற்குப் பழந்தமிழர் அளித்த முக்கியத்துவத்தால் முத்தமிழ் மொழியாகக் காட்சியளிக்கிறது தமிழ். இயல் என்பது எழுதப்படுவதும் பேசப்படுவதுமாகிய தமிழ். இசை என்பது பண்ணிசைத்துப் பாடப்படும் தமிழ். கூத்து என்பது ஆடல்பாடல்களுடன் உணர்த்தப்படும் தமிழ்.

இவற்றை விடுத்து, தமிழர் சிற்பக்கலையும் கட்டிடக்கலைக்கும் சான்றாகத் தமிழகமெங்கும் பிரம்மாண்டமான கோயில்களும், அணைகளும், கோட்டைகளும் உள்ளன. பழந்தமிழரின் பெரும் வாழ்விற்குச் சான்றாக உள்ள இவற்றில் பல யுனெஸ்கோ நிறுவத்தில் உலகப் பாரம்பரிய தலங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

தமிழர் உணவு

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

வாழை இலையும், விருந்தோம்பலும், இயற்கையோடு இணைந்த உணவு முறையும் தமிழர் உணவில் இன்றியமையாதவை. உணவே மருந்து எனும் திருமூலரின் வாக்குக்கிணங்க, தமிழர் உணவில் சுவையும் ஆரோக்கியமும் ஒன்று சேர்ந்து விருந்தளிக்கும். நமது பாரம்பரிய அரிசி வகைகள், காய் கனி வகைகள் மற்றும் உணவு செய்முறைகளை மீட்டெடுத்து இந்த நவீன யுகத்திற்கு ஏற்ப தகவமைத்துக்கொள்வது தான் காலத்தின் தேவையாக இருக்கிறது.

தமிழர் இலக்கியம்

மிகச்செறிவான ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டது தமிழ் இலக்கியம். மிகத் தொண்மையான காப்பியங்கள் முதல் உலகப் பொதுமறையாக விளங்கும் திருக்குறள் வரை தமிழர் வாழ்வைச் செம்மையாக்க, கலையுணர்வை உருவாக்க, அழகியலைக் கொண்டாடிய நூல்கள் ஏராளம்.

இவற்றில் பல நூல்கள் இன்றும் வழக்கத்தில், வாழ்வில், நம் பாடத்திட்டங்களில் இருப்பதே தமிழ் மொழிக்கும் தமிழ் சமூகத்திற்கும் பெருமை.

ஹூஸ்டன் தமிழ் இருக்கை - தமிழுக்கென ஒரு இருக்கை

பல்கலைக்கழகங்களில் குறிப்பிட்ட ஒரு துறை அல்லது மொழிக்கெனத் தனித் துறைகள் ஏற்படுத்தப்படுவதுண்டு. இருக்கை (Chair) என்பது வித்தியாசமானது. ஒரு துறையோடு இணைக்கப்பட்டிருந்தாலும் அதற்கெனத் தனித்த அடையாளமும் மரியாதையும் இருக்கும். ஒரு மொழிக்கான இருக்கை என்பது அந்த மொழிக்கெனப் பிரத்தியேகமாக ஒரு பேராசியரை நியமிப்பதாகும். அவர் தலைமையில் அம்மொழி சார்ந்த ஆய்வுகள் அங்கே நடைபெறும். மொழியைக் கற்றுத்தருவதற்கும், ஆண்டுதோறும் கருத்தரங்குகள் நடத்தவும் ஏற்பாடு இருக்கும். ஒரு குறிப்பிட்ட அறிவுப் புலத்துக்குப் பல்கலைக்கழகம் வழங்கும் அதிகபட்சமான மரியாதை என்று சொல்லலாம். பல்கலைக்கழகம் உள்ளவரை இந்த இருக்கையும் செயல்படும்.

அமெரிக்காவின் புகழ் பெற்ற ஹூஸ்டன் பல்கலைக்கழகமும் தமிழ் மொழியைப் படிக்கத் தனி இருக்கை அமைத்துத் தர ஒப்புதல் வழங்கியுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும். info@houstontamilchair.org